துணி வியாபாரம் செய்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தா பகுதியில் முகமது ஜாமீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் அவரின் மகன் அமானுல்லா ஆகிய இருவரும் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்து திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் துணி வியாபாரம் செய்து வந்திருக்கின்றனர். இதனையடுத்து முகம்மது ஜாமீன் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பின்னர் அவரை மகன் அமானுல்லா மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே முகமது ஜாமீன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முகமது ஜாமீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக ஏற்கனவே வழக்கு பதிந்திருந்த நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.