மாநகராட்சி பகுதியில் நடைபெற்ற கடை ஏலத்தில் வியாபாரிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு கடைகள் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் இரண்டு உணவகங்கள் மற்றும் 42 கடைகள் புதிதாக கட்டப்பட்டுள்ளது. மேலும் திருவையாறு பேருந்து நிலையத்தில் பழைய கடைகள் அனைத்தும் இடிக்கப்பட்டு வணிக வளாகங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த கடைகள் அனைத்தும் தஞ்சை மாநகராட்சி பகுதியில் ஏலம் விடப்பட்டன. இந்த ஏலத்தில் கடைகளுக்கு 2 லட்சம் மற்றும் உணவகங்களுக்கு 4 லட்சம் செலுத்திய வியாபாரிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஏராளமான வியாபாரிகள் வணிகர் சங்க நிர்வாகிகள் அரசியல் பிரமுகர்கள் மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ளனர். இதில் மாநகராட்சி செயற்பொறியாளர்கள் ஜெகதீசன் வருவாய் ஆய்வாளர் பிரகாஷ் மற்றும் பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து முதற்கட்டமாக மாற்று திறனாளிகளுக்கு கடை ஒதுக்குவது தொடர்பாக ஏலம் விடப்பட்டுள்ளது. அப்போது திருவையாறு பேருந்து நிலையத்தில் முன்பு கடைகள் வைத்திருந்த வணிகர்கள் மற்றும் வியாபாரிகள் தங்களுக்கும் கடைகளை ஒதுக்க வேண்டும் என திடீர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இவர்கள் தங்களுக்கும் கோர்ட்டில் தங்களுக்கும் கடைகளை ஒதுக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனைப் பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் பேச்சுவார்த்தைக்கு உடன்படாத வணிகர்கள் மற்றும் தி.மு.க-வினர்கள் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். அப்போது அவர்கள் கோர்ட் உத்தரவை மதிக்காமல் ஏலம் நடைபெறுவதாகவும் அதனை நிறுத்த வேண்டும் எனவும் பல்வேறு கோஷங்களை எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.