நடிகை சித்ரா தனது மரணத்திற்கு முன் வித்தியாசமான முறையில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின் சின்னத்திரை சீரியல்களில் நடிகையாக கலக்கி வந்தவர் சித்ரா. இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். ஆனால் சித்ராவின் திடீர் மறைவு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இவர் இறப்பதற்கு முன் கால்ஸ் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். சமீபத்தில் இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை சித்ரா தனது மரணத்திற்கு முன் வித்தியாசமான முறையில் போட்டோஷுட் நடத்திய புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.