Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் டிவியின் கோமாளி நடிகை…. அம்மாவுடன் இருக்கும் புகைப்படம்…. ஆச்சரியத்தில் ரசிகர்கள்….!!

VJ மணிமேகலை தனது அம்மாவுடன் இருக்கும் சிறுவயது புகைப்படம் ஒன்று வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சன் மியூசிக் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் VJ மணிமேகலை. இதனையடுத்து இவர் விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இதனை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தார்.

இதன் மூலம் மணிமேகலையின் புகழ் அனைத்து இடங்களிலும் பரவியது. இவருக்கும் உசேன் என்பவருக்கும் காதல் திருமணம் நடைபெற்றது. இதற்கிடையில் தொகுப்பாளினி மணிமேகலை சிறுவயதில் தனது அம்மாவுடன் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் அனைவரும் மணிமேகலையா என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர்

Categories

Tech |