தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களாக இருப்பவர்கள் விஜய், அஜித். இவர்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இருவரின் ரசிகர்களும் சண்டையிடும் சம்பவங்களும் நடந்துள்ளது. இதனிடையே அவ்வபோது இருவரின் படமும் ஒரே நேரத்தில் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் போட்டியை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு ஆறுமுறை அஜித்-விஜய் நடித்த படங்கள் நேருக்கு நேராக மோதியுள்ளது.
அந்த பட்டியல் இதோ
- 1996இல் விஜய் நடிப்பில் பூவே உனக்காக மற்றும் அஜித் நடிப்பில் கல்லூரி வாசல் திரைப்படமும் ஒன்றாக திரைக்கு வந்தது. இதில் விஜய் நடித்த பூவே உனக்காக திரைப்படம் மாபெரும் வெற்றியை அடைந்த நிலையில் கல்லூரி வாசல் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எட்டவில்லை.
- 2000ஆம் வருடம் விஜய் நடிப்பில் குஷி திரைப்படமும் அஜித் நடிப்பில் உன்னை கொடு என்னை தருவேன் திரைப்படமும் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியானது. இதில் குஷி பெற்ற வெற்றியை அஜித்தின் உன்னை கொடு என்னை தருவேன் திரைப்படம் பெறவில்லை.
- 2001 ஆம் ஆண்டு பொங்கல் சிறப்புத் திரைப்படமாக விஜய் சூர்யா நடித்த பிரண்ட்ஸ் திரைப்படமும் அஜித் நடித்த தீனா திரைப்படம் வெளியானது. இதில் இரண்டு படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
- 2002ஆம் வருடம் தீபாவளியை முன்னிட்டு விஜய் நடிப்பில் பகவதி திரைப்படமும் அஜித் நடிப்பில் வில்லன் திரைப்படமும் திரைக்கு வந்தது. இதில் அஜித்தின் வில்லன் திரைப்படம் பெற்ற வெற்றியை பகவதி படத்தால் பெறமுடியவில்லை.
- 2007 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு விஜய் நடித்த போக்கிரி திரைப்படம், அஜீத்தின் ஆழ்வார் திரைப்படம் ஆகிய இரண்டும் திரைக்கு வந்த நிலையில் போக்கிரி ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றியைப் பெற்றது. ஆனால் அஜித் நடித்த ஆழ்வார் பெரிய வெற்றியைப் பெறவில்லை.
- 2014ஆம் வருடம் பொங்கலை முன்னிட்டு விஜய் நடிப்பில் ஜில்லா திரைப்படமும் அஜித் நடிப்பில் வீரம் திரைப்படமும் வெளியானது. இதில் ஜில்லாவை விட வீரம் பெரும் வெற்றியைப் பெற்று ரசிகர்களை கவர்ந்தது.
இதுவரை 6 முறை விஜய் அஜித் நடித்த திரைப்படங்கள் நேருக்கு நேராக மோதிக் கொண்ட நிலையில் தற்போது மீண்டும் அஜித் நடிப்பில் வெளிவர இருக்கும் வலிமை திரைப்படமும் விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படமும் 2022 ஆம் வருடம் பொங்கலை முன்னிட்டு நேருக்கு நேர் மோத உள்ளது. இந்த முறை எந்த படத்திற்கு வெற்றி கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.