விஜய்யின் அடுத்த படத்தை பெண் இயக்குனர் ஒருவர் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இளைய தளபதி விஜய் நடித்துக்கொண்டிருக்கும் படம் மாஸ்டர் இத்திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளிவரும் நிலையில் உள்ளது. ஆனால் விஜய் இப்போதே தனது அடுத்த படத்திற்கு தயாராகியுள்ளார். இரண்டு இயக்குனர்களிடம் கதைகளை கேட்டுள்ளார்.
சமீபத்தில் சுதா கொங்கராவிடம் கதை கேட்டுள்ளார். சுதா கூறிய கதை நடிகர் விஜய்க்கு பிடித்துப்போக இயக்குனர் சுதா கொங்கராவுடன் படம் நடிக்க முடிவு எடுத்துள்ளார் விஜய். அதனைத்தொடர்ந்து இயக்குனர் சுதாவிடம் அவரது படத்தை போட்டுக்காட்ட கேட்டுள்ளார்.
சுதா கொங்கரா சூர்யாவை கதாநாயகனாக வைத்து இயக்கிய திரைப்படம் சூரரைப்போற்று அதனை விஜய்க்கு போட்டு காட்டியுள்ளார். சூரரை போற்று திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் ஒருசில காட்சிகள் மட்டுமே விஜய்க்கு போட்டுக் காட்டப்பட்டது. கிட்டதட்ட முக்கால் பாகம் படத்தை விஜய் பார்த்துவிட்டார். அதனை தொடர்ந்து விஜய் சுதாவை பாராட்டி அவரது படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.