விஜய் மகன் அறிமுகமாக இருக்கும் முதல் படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவலை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்
தமிழ் திரையுலகில் பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் இளைய தளபதி விஜய். தற்போது இவரது மகனும் திரைத்துறையில் அடியெடுத்து வைக்கப் போவதாக தகவல் வெளியானது. ஆனால் இதுகுறித்து நடிகர் விஜய் இதுவரை எதுவும் கூறவில்லை. இந்நிலையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்ததை தொடர்ந்து தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள்ளது.
ஆனால் இந்த படத்தில் விஜய் சேதுபதி வித்தியாசமாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாஸ்டர் படப்பிடிப்பின்போது விஜய்யிடம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா இரண்டாம் பாகம் குறித்து விஜய் சேதுபதி கூறியதாகவும் அதற்கு விஜய் ஓகே சொன்னதாகவும் தெரியவந்துள்ளது. பின்னர் விஜய் மகனுக்கு சம்பளம் 7 கோடி என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார். ஆனால் விஜய் படம் முடிந்த பிறகு அது பேசலாம் என கூறியுள்ளார். ஆனால் தற்போது இருக்கும் ஊரடங்கினால் எந்த தகவல்களும் அதிகாரபூர்வமாக வெளிவரவில்லை. இருந்தும் விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.