Categories
சினிமா தமிழ் சினிமா

“காந்தி டால்க்ஸ்” பிறந்தநாளில் செம ட்ரீட்….. ட்விட்டரில் சர்ப்பிரைஸ் கொடுத்த VJS….!!

தமிழ் சினிமா திரையுலகில் மிகவும் பிரசித்திப்பெற்ற நடிகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர். இன்று பிறந்த நாள் கொண்டாடும் அவருக்கு பல சினிமா பிரபலங்களும், அவரது நட்பு வட்டாரங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தொடர்ந்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது புதிய படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில்,

சில நேரங்களில் மௌனம் மிகவும் சத்தமாக இருக்கிறது. எனது பிறந்தநாளை முன்னிட்டு எனது புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அறிவிக்கிறேன். ஒரு அமைதியான படமான #Gandhitalks உடன் புதிய சவால், புதிய தொடக்கத்திற்கு நான் தயாராக உள்ளேன் என்றும், உங்களது அன்பும், ஆசீர்வாதங்களும் எனக்கு தேவை எனவும்  அறிவித்துள்ளார். 

Categories

Tech |