Categories
சினிமா தமிழ் சினிமா

மூன்றாவது முறையாக விஜய்யுடன் இணையும் பிரபலம்… யார் தெரியுமா?…!!!

பிகில் , மாஸ்டர் படங்களில் விஜய்யுடன் இணைந்து நடித்த பிரபலம் ஒருவர் ‘தளபதி 65’ படத்திலும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குனர் நெல்சன் திலிப்குமர் இயக்குகிறார்  . சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் .

விஜய்யுடன் மூன்றாவது முறையாக இணையும் பூவையார்

இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் பூவையார் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் பிகில் படத்தில் விஜய்யுடன் இணைந்து வெறித்தனம் பாடலுக்கு அசத்தலாக நடனமாடி இருப்பார் . மேலும் மாஸ்டர் படத்திலும் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார் . தற்போது மூன்றாவது முறையாக விஜய்யுடன்  இணைந்து பூவையார் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |