Categories
உலக செய்திகள்

காங்கோவில் வெடித்து சிதறிய பெரிய எரிமலை.. நெருப்புக் குழம்பு சூழ்ந்து சாம்பலான வீடுகள்..!!

காங்கோவில் உள்ள மவுண்ட் நயிராகாங்கோ என்ற பெரிய எரிமலை நேற்றிரவு வெடித்து சிதறியதில் ஏராளமான வீடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன. 

காங்கோ நாட்டிலுள்ள கோமா என்ற ஏரிக்கரை நகரில் சுமார் 20,00,000 மக்கள் வசிக்கிறார்கள். மவுண்ட் நயிராகாங்கோ என்ற பெரிய எரிமலை இந்நகரத்திற்கு மிக அருகில் அமைந்திருக்கிறது. கடந்த சில நாட்களாகவே சீற்றத்துடன் இருந்த, இந்த எரிமலை திடீரென்று நேற்றிரவில் வெடித்துச் சிதறிவிட்டது.

அதிலிருந்து நெருப்பு குழம்பு வெளியேறி, அந்த பகுதி முழுவதும் சூழ்ந்து, அதிகமான வீடுகள் சாம்பலாகிவிட்டன. எனினும் அதற்கு முன்பாகவே அங்கிருந்த மக்கள் பாதுகாப்பாக  வெளியேற்றப்பட்டதால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை. மேலும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள், உலகில் இருக்கும் ஆபத்தான எரிமலைகளில் ஒன்றாக மவுண்ட் நயிராகாங்கோவும் இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.

Categories

Tech |