Categories
உலக செய்திகள்

“இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை!”… 13 நபர்கள் உயிரிழந்த பரிதாபம்…!!

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டு 13 நபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியா நாட்டில், கிழக்கு ஜாவா மாகாணத்தில் அமைந்திருக்கும் செமேரு எரிமலை சுமார் 3676 மீட்டர் உயரம் உடையது. இந்த எரிமலையிலிருந்து நேற்று லேசான புகை உருவாகி, அதனைத் தொடர்ந்து, திடீரென்று எரிமலை வெடித்து சிதறியது. இதனால் சாம்பல் புகை உருவானது.

மேலும், எரிமலை வெடித்த போது அதன் அருகே இருந்த குடியிருப்புகள் பாதிப்படைந்தது. மேலும் ஒரு பாலம் சேதமடைந்திருக்கிறது. இதில், 13 நபர்கள் உயிரிழந்ததோடு, 100 நபர்கள் காயம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அப்பகுதியைச் சேர்ந்த 900 மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.

Categories

Tech |