இந்தோனேசியாவில் எரிமலை வெடித்ததில் வெளியான சாம்பலில் புதைந்த சிறுவனின் சடலத்தை மீட்பு குழுவினர் மீட்ட போது, எடுத்த புகைப்படம் காண்போரை கலங்கடித்துள்ளது.
இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவில் என்ற மிகப்பெரிய எரிமலை வெடித்து சிதறியது. அதிலிருந்து வாயு மற்றும் சாம்பல் வெளியேறியதில் 15 நபர்கள் உயிரிழந்ததோடு, 27 நபர்கள் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிமலை வெடித்து சிதறியதில் அருகில் இருந்த கிராமங்களும் நகரங்களும் டன் கணக்கில் சாம்பலுக்குள் புதைந்தது.
நேற்று முன்தினம் Semeru என்ற இந்த எரிமலை வெடித்து சிதறியது. அதன்பின்பு, காலநிலையால் மீட்பு பணி நேற்று நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், கடும் சேதமடைந்த Sumberwuluh என்ற கிராமத்தின் மொத்த வீடுகளும் சாம்பலில் புதைந்தது. இந்தப் பகுதியில், சாம்பலுக்குள் புதைந்த 13 வயது சிறுவனின் உடலை மீட்புக்குழுவினர் மீட்டனர்.
சிறுவனின் உடல் சாம்பலில் புதைந்து போயிருந்தது காண்பவர்களின் மனதை நொறுக்கியது. மேலும், இதில் 56 நபர்கள் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். காணாமல் போனவர்களை தேடி வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இது மட்டுமல்லாமல், இந்த சம்பவத்தில் 3000 வீடுகளும் 38 பள்ளிகளும் மொத்தமாக பாதிக்கப்படைந்தது.