Categories
உலக செய்திகள்

ஸ்பெயினில் எரிமலை வெடித்து சிதறியது.. மக்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றும் பணி தீவிரம்..!!

ஸ்பெயினில் கேனரி தீவின் எரிமலை வெடித்து சிதறி வரும் நிலையில், அங்கிருக்கும் மக்களை பத்திரமான இடத்திற்கு மாற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கேனரி தீவு பகுதியில் இருக்கும் ஒரு எரிமலை திடீரென்று வெடித்து சிதறிவிட்டது. அதிலிருந்து லாலா குழம்பு வெளியேறி வருவதால், மலையடிவாரத்தில் வசிக்கும் 4 கிராமங்களின் மக்களையும், விலங்குகளையும் பத்திரமான இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதிகாரிகள், 10,000 மக்களை மீட்க வேண்டியுள்ளது என்று தெரிவித்துள்ளார்கள். மேலும், மக்கள், எந்த காரணத்திற்காகவும், எரிமலை குழம்பு அருகில் சென்று விடக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் சாம்பல் புகை வெளியேறி வருகிறது. எனவே, மக்கள் தங்கள் குடியிருப்புகளிலிருந்து வெளியே வரக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த எரிமலை வெடிப்பால் உண்டாகும் சேதங்கள் தொடர்பில் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டியிருப்பதால், நாட்டின் பிரதமரான பெட்ரோ சாஞ்செஸ், ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்திற்காக மேற்கொள்ள வேண்டிய பயணத்தை ஒத்தி வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |