Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவின் மிகப்பெரிய எரிமலை வெடிப்பு…. 2000 மக்கள் வெளியேற்றம்…!!!

இந்தோனேசிய நாட்டில் மிகப்பெரிய எரிமலை திடீரென்று வெடித்து சிதறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் இருக்கும் லுமாஜாங் என்ற நகரில் செம்மேரு  என்ற 12000 அடிகள் உயரமுடைய மிகவும் பெரிதான எரிமலை அமைந்திருக்கிறது. இந்நிலையில் பலத்த மழையால் அந்த எரிமலையின் குவி மாடம் சாய்ந்தது. அதன் பிறகு, அதிலிருந்து நெருப்பு குழம்பு வெளியேறியது.

சுமார் 5 ஆயிரம் அடி உயரத்திற்கு சாம்பல் புகைகள் காணப்பட்டது. அதனை சுற்றி இருக்கும் பகுதிகளில் சாம்பல் பரவியதால், மீட்பு படையினர் அங்கு விரைந்தனர். அங்கிருந்து 2000 மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பினர். அப்பகுதிகளில் இருக்கும்  சாலைகளும் அடைக்கப்பட்டன.

அதிகாரிகள் அந்த பகுதியை கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து, எரிமலையிலிருந்து அதிகமான நெருப்பு குழம்பு வெளியேறிக் கொண்டிருக்கிறது. எனவே, பல பகுதிகளுக்கு சாம்பல் புகை பரவக்கூடிய ஆபத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |