கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையே அச்சுறுத்தி வரும் நிலையில் இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது ஏப்ரல் 14ம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும். இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னையில் உணவு டெலிவரி செய்யும் ஆன்லைன் நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளனர். மேலும் இன்று மாலை 6 மணி முதல் அனைத்து டீக்கடைகளையும் மூடவும் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் ஆதரவற்றோர், இயலாதவர்களுக்கு உணவு வழங்குவதற்காக, தேவையான அரிசி, சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களையும் சானிட்டரி நாப்கின், முக கவசம் ஆகியவற்றையும் ஜெ.ஜெ. விளையாட்டு அரங்கம், அண்ணா நகர், அம்மா அரங்கத்தில் கொடுக்கலாம்.
நேரடியாக யாரும் சமைத்த உணவை வழங்க வேண்டாம் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பாதுகாப்பாக உணவு அளிக்க வேண்டுமென்பதால் தான் இந்த விதிமுறைகளை மாநகராட்சி விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.