Categories
அரசியல் தேசிய செய்திகள்

கருத்துக்கணிப்பில் பாஜக ஆட்சி…. தொண்டர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம்…. பிரியங்கா காந்தி வேண்டுகோள்..!!

காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி கருத்துக்கணிப்பால் தொண்டர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலுக்கான 542 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தேர்தல் நடந்து முடிந்த பின் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் பெரும்பான்மையாக  பிரதமர் மோடியே  மீண்டும் ஆட்சியமைப்பார் என்று அறிவிப்பு வெளியானது. பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்களை காட்டிலும் அதிகமாக, 300 தொகுதிகள் வரை வெற்றிபெறும் என்றும் சில கணிப்புகள் தெரிவித்தன. இதனால் பாஜகவினர் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் இதுதொடர்பாக  பேசியுள்ள  பிரியங்கா காந்தி, கருத்துக்கணிப்பால் யாரும் சோர்வடைய தேவையில்லை. தொண்டர்கள் யாரும் நம்பிக்கை இழக்க வேண்டாம். நமது கடின உழைப்புக்கு நிச்சயம்  வெற்றி கிடைக்கும். நமது உழைப்பு ஒருபோதும் வீண் போகாது. வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு வெளியிலும், ஓட்டு எண்ணும் மையத்தின் உள்ளேயும்  நமது தொண்டர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |