வால்வோ நிறுவனம் இந்தியாவில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் விற்பனை செய்து வரும் தங்களுடைய கார்களின் பேஸ்லிப்ட் மாடலை தற்போது அறிமுகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. இந்த மாடல்களின் விலையை வால்வோ நிறுவனமானது வருகின்ற செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி அறிவிக்க உள்ளது. இந்த முறை மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ள வால்வோ XC 40 பெட்ரோல் மட்டுமின்றி மைல்ட் ஹைபிரிட் பவர் டி ரெயின் ஆப்ஷனிலும் கிடைக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த காரின் டீசல் வேரியண்ட்டின் விற்பனை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மாடலுக்கு மாற்றாக 2023 வேரியண்ட் அறிமுகமாக உள்ளது.
தற்போது பேஸ்லிப்ட் மாடல் கார்களின் அம்சங்களை பற்றி இப்போது பார்க்கலாம். பேஸ்லிப்ட் மாடலில் கூர்மையான ஹெட்லைட், ட்வீக் செய்யப்பட்ட பம்பர்கள், பிரேம்லெஸ் கிரில், புதிய எக்ஸ்டீரியர் பெயிண்ட் ஆப்ஷன்கள் போன்றவை வழங்கப்பட்டுள்ளது. மேலும் XC40 மாடல் மட்டுமின்றி வால்வோ XC90 மாடலிலும் அப்டேட் செய்யப்பட உள்ளது. இதனுடைய புது வெர்ஷனில் புதிய இன்போடைன்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட இருக்கிறது. இந்தக் கார்களின் விற்பனைக்கு ஏற்கனவே முன்பதிவு நடந்து கொண்டிருக்கிறது. மேலும் இதன் விநியோகம் விலை அறிவிக்கப்பட்ட பின்பு தான் துவங்கும் என தெரிய வந்துள்ளது.