நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெற உள்ள தேர்தலுக்கு விண்வெளி வீராங்கனை விண்வெளியில் ஓட்டுபோட உள்ளதாக கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இவ்வருடத்தின் ஆரம்ப காலம் முதல் தற்போது வரை இந்த வைரஸ் உலக நாடுகளிடையே பெரும் அச்சுறுத்தல் நோயாகவே இருக்கிறது. ஆனால் முன்பை காட்டிலும், இதனை கட்டுப்படுத்துவதில், பலநாடுகள் முன்னேறி விட்டன. அந்தவகையில்,
அமெரிக்காவில் இந்த கொரோனாவுக்கு இடையில் வருகின்ற நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இது ஒருபுறமிருக்க, அக்டோபரில் விண்வெளிக்குச் செல்ல உள்ளார் அமெரிக்க விண்வெளி வீராங்கனைகேட் ருபீன்ஸ். விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வு செய்ய உள்ள அவர், நவம்பரில் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில், விண்வெளியிலிருந்து வாக்களிக்கப் போவதாக தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தில் பங்கேற்பது முக்கியம் என்றும், அனைவரும் தவறாமல் வாக்களிக்கவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.