செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, இந்த அரசு எல்லாவற்றிலும் ஒரு விளம்பரத்தை தான் பார்க்கிறார்கள், எதையும் திட்டமிட்டு செய்வதில்லை, திட்டமிட்டு நடப்பதில்லை. எந்த ஒரு அறிவிப்பு என்றாலும் தேர்தல் நேரத்தில் ஏதாவது ஒரு வாக்குறுதிகளை கொடுத்து ஜெயித்த விட வேண்டும் என்ற அடிப்படையில் தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து விட்டார்கள்.
இது போன்ற செயல்கள் தேர்தல் நேரத்தில் மக்களை கவர்வதற்காக, மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்குவதற்காக… திராவிட முன்னேற்ற கழகம் இன்றைக்கு சொல்லி, வாக்குகளை வாங்கி, ஆட்சியில் அமர்ந்து விட்ட பிறகு, எதுவும் செய்யாமல் இருப்பது மக்கள் மிகப்பெரிய வெறுப்பில் இருக்கிறார்கள், கொந்தளித்து போய் இருக்கிறார்கள். அதனால் நிச்சயமாக திமுகவிற்கு சரியான பாடம் வருகின்ற தேர்தலில் அமையும்.
தமிழகத்துக்கு உண்மையான விடியல் வேண்டுமா ? அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கழகப் பொதுச்செயலாளர் நம்மில் ஒருவர், நம் விவசாயி, உண்மையான தமிழர், அவர் வந்து முதலமைச்சரானால் இதற்கு எல்லா தீர்வு கிடைக்கும். அதற்கு ஒரே தீர்வு வருகின்ற தேர்தலலில் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்.
தமிழகத்தில் இனி எப்போது தேர்தல் வந்தாலும்… தமிழகத்தை பொறுத்தவரை அகில இந்திய கட்சியாக இருந்தாலும் சரி, எந்த கட்சியாக இருந்தாலும் சரி… அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் வெல்ல போகிறது. எங்களுடைய தலைமையில் இருக்கின்ற கட்சிகள் நிச்சயமாக வெற்றி பெறும் அதில் மாற்று கருத்து எதுவும் இல்லை என்பது தான் மக்களின் நிலை என தெரிவித்தார்.