Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வாக்காளர்களுக்கு தேர்தல் அதிகாரிகளுக்கும் வாக்குவாதம்” திருவான்மியூரில் பரபரப்பு…!!

திருவான்மியூர் அட்வென்ட் கிறிஸ்துவ பள்ளியில் வாக்காளர்களுக்கு தேர்தல் அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற  தேர்தலும், 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதற்காக இன்று தமிழகம் முழுவதும் சுமார் 67 ஆயிரத்து 820 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் காலை 7 மணிக்கு நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கின்றனர்.

இந்நிலையில் சென்னையில் உள்ள திருவான்மியூர் அட்வென்ட் கிறிஸ்துவ பள்ளியில் இன்று காலை வாக்காளர்கள் வாக்களிக்க வந்தனர். அப்போது பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 251_ஆவது வாக்குசாவடியில் உள்ள தேர்தல் அதிகாரிகள் வாக்காளர்களை பார்த்து பூத்சிலிப் இல்லாதவர்கள் வரிசையில் நிற்க வேண்டாம் , சிலிப் வாங்கிய பின் வரிசையில் நிற்கவும் என்று கூறியுள்ளதாக தெரிகின்றது. இதனால் ஆத்திரமடைந்த வாக்காளர்கள் தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |