Categories
தேசிய செய்திகள்

வாக்காளர் அடையாள அட்டையை திருத்தம் செய்ய கொடுத்தா … இப்படியா பன்றது..! அதிர்ச்சியில் முதியவர்

கொல்கத்தாவில் வாக்காளர் ஒருவரின், வாக்காளர் அடையாள அட்டையில் தேர்தல் ஆணையம்  நாய் புகைப்படத்தை அச்சிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தைச் சேர்ந்த சுனில் கர்மகர்.இவர் தனது வாக்காளர் அடையாள அட்டையில் பிறந்த தேதி தவறாக இருந்ததால் திருத்துவதற்கு தேர்தல் அலுவலர்களிடம் விண்ணப்பித்துள்ளார்.

இந்நிலையில் திருத்தம் செய்யப்பட்ட புதிய வாக்காளர் அட்டையை பெறுவதற்காக சென்ற சுனில், வாக்காளர் அட்டையை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார். அதாவது வாக்காளர் அட்டையில் அவரது புகைப்படத்திற்கு பதில் நாய் புகைப்படம் அச்சிடப்படிருந்தது இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாக்காளர் அட்டைகளில் பெயர், முகவரி, பிறந்த தேதி ஆகியவற்றில் எழுத்துப்பிழைகள் வருவது சாதாரணம் விஷயம்தான். இந்த மாதிரியான கவனக்குறைவாக நடந்து கொண்ட தேர்தல் ஆணையத்தின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில்,” எனது வாக்காளர் அட்டையில் நாய்  புகைப்படத்தைப் பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்தேன். ஆனால், அங்குள்ள அலுவலர்  சிறிதும் பொறுப்பில்லாமல் கையெழுத்திட்டு அதனை அப்படியே என்னிடம் கொடுத்து விட்டார்.  இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் (BDO) புகார் அளிக்க உள்ளேன்” என்றார்.

இதுகுறித்து அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர், “சுனிலின் புகைப்படம் திருத்தம் செய்யப்பட்டு விரைவில் புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.

Categories

Tech |