மலை கிராமத்தில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு குதிரை மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள 402 வாக்குப்பதிவு மையங்களில் லிங்கவாடி மலை உச்சியில் இருக்கும் மலையூர் கிராமமும் ஒன்றாகும். இந்த கிராமத்திற்கு செல்ல சாலை வசதி இல்லை. எனவே இந்த கிராமத்திற்கு செல்ல வேண்டும் எனில் கரடுமுரடான மலைப்பாதை வழியாக பயணிக்க வேண்டும். இந்த மலை கிராமத்தில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு ஒவ்வொரு தேர்தலின்போதும் குதிரைகள் மூலம் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில் இரண்டு வாக்குப்பதிவு எந்திரங்கள், எழுது பொருட்கள் அடங்கிய பெட்டிகள், பாதுகாப்பு உபகரணங்கள் போன்றவை மூன்று குதிரைகள் மூலம் முளையூர்-எல்லை பாறை மலை அடிவாரத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் மலைப்பாதையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. அப்போது நான்கு போலீஸ்காரர்கள், நான்கு தேர்தல் உதவி அலுவலர்கள் மலைப்பாதை வழியாக நடந்து சென்றனர்.