பண்ருட்டி அருகே திருவதிகையில் உள்ள வாக்குசாவடியில் வாக்குபதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிகியுள்ளது.
தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற தேர்தலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று நடைபெற்றுவருகிறது. இதில் பதற்றமான 8,293 வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பிற்காக கூடுதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 30 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவினை கண்காணிக்க கேமராக்கள் பொறுத்தபட்டுள்ளன.
வெயிலை பொருள்படுத்தாமல் சுறுசுறுப்பாக மக்கள் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் ”பண்ருட்டி அருகே திருவதிகையில் உள்ள வாக்குசாவடியில் வாக்குபதிவு இயந்திரத்தின் பட்டன்கள் உடைந்ததால் அந்த பகுதியில் வாக்கு பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என்று தகவல் பரவி வருகிறது.