VPNசெயலிகளை தடை செய்ய எடுத்த நடவடிக்கை தொடர்பாக மத்திய அரசை விரிவான பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற மதுரை கிளை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.அதிலும் குறிப்பாக பப்ஜி மற்றும் பிரீ பையர் போன்ற தடை செய்யப்பட்ட விளையாட்டுகளை அனுமதிக்கும் VPN செயலிகளை தடை செய்வது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. சில ஆன்லைன் விளையாட்டுக்களால் பலரும் மனநலம் பாதிக்கப்படும் சூழலுக்கும் தற்கொலை செய்து கொள்ளும் சூழலுக்கும் தள்ளப்படுவதால் அரசு பல ஆன்லைன் விளையாட்டு களுக்கு தொடர்ந்து தடை விதித்து வருகிறது. அதன்படி பிரீ பயர் மற்றும் பப்ஜி உள்ளிட்ட பல விளையாட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில் பிரீ பயர் மற்றும் பப்ஜி போன்ற தடை செய்யப்பட்ட விளையாட்டுகளுக்கு குழந்தைகள் அடிமை ஆவது குறித்து நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.இளைஞர்களை நாசப்படுத்தும் ஆன்லைன் விளையாட்டு களுக்கு இந்த நீதிமன்றம் முடிவு கட்டும் என்று உச்ச நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உறுதி அளித்துள்ளனர். மேலும் VPNசெயலிகளை தடை செய்ய எடுத்த நடவடிக்கை தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.