இந்தியா முழுவதும் மிக பிரபலமான நிறுவனம் வாசன் ஐ கேர். கண் மருத்துவ துறையில் ஏராளமான மக்களின் நம்பிக்கையைப் பெற்று மிக குறுகிய அளவில் மிகப்பெரிய அளவிலான சேவைகளை இந்திய முழுவதும் வழங்கிய நிறுவனம். இந்நிலையில் திருச்சியை தலைமையிடமாகக் கொண்ட வாசன் ஐ கேர் குழும உரிமையாளர் டாக்டர் அருண் சென்னை காவேரி மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார்.
இவருக்கு வயது 52. இந்தியா முழுவதும் 170 கிளைகளுடன் வாசன் ஐ கேர் செயல்பட்டு வருகிறது. இவர் முதன்முதலில் 2002 இல் திருச்சியில் வாசன் ஐ கேர் மருத்துவமனையைத் தொடங்கினார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.