Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

உடைக்கப்பட்ட பூட்டு…. அதிர்ச்சியடைந்த மடத்தின் ஊழியர்கள்…. திருவாரூரில் பரபரப்பு….!!

குருதெட்சிணாமூர்த்தி மடத்தில் மர்மநபர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மடப்புரம் பகுதியில் உள்ள குருதெட்சிணாமூர்த்தி ஜீவ சமாதி மடத்தில் எப்போதும்போல் பூஜைகள் முடிந்து கதவுகள் அடைக்கப்பட்டது. இந்நிலையில் வழக்கம்போல் மடத்தின் ஊழியர்கள் கோவிலை திறப்பதற்காக சென்று பார்த்தபோது அங்கு வாசல் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மடத்தின் ஊழியர்கள் டவுன் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது மடத்தின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து கோவில் முழுவதும் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |