வீட்டின் பூட்டை உடைத்து திருடர்கள் 9 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள இந்திரா நகரில் விஜயானந்த்-வனிதா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 12-ஆம் தேதி வனிதா வீட்டை பூட்டி விட்டு உறவினர்கள் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து வனிதா வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் வனிதா உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 9 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது.
இதுகுறித்து வனிதா கொடுத்த புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து திருடர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் வடிவேல் என்பவரை இன்ஸ்பெக்டர் பிராங்வின் உட்ரோவில்சன் கைது செய்தார். மேலும் தலைமறைவாக இருக்கின்ற ஒருவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.