வீடு புகுந்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பம்பாடியில் சின்னமுத்து மனைவி சசிகலா வசித்து வருகிறார். இந்நிலையில் சசிகலா வீட்டை அடைத்துவிட்டு உறவினர் வீட்டு திருமணத்திற்காக சேலம் சென்றார். இதனையடுத்து கடந்த 27-ஆம் தேதி சசிகலா மீண்டும் தன் வீட்டுக்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
அதன்பின் சசிகலா உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த மோதிரம், கம்மல், கொலுசு மற்றும் 25 ஆயிரம் ரூபாய் போன்றவை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து சசிகலா கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.