Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“உடைந்து விழும் அபாய நிலையில் இருக்கு” விவசாயிகளின் போராட்டம்…. தர்மபுரியில் பரபரப்பு….!!

விளை நிலங்களில் உள்ள மின்கம்பங்களை அகற்றக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பூதனஅள்ளி ஊராட்சி சத்யாநகர் கிராமத்தில் விவசாய விளை நிலங்களுக்கு இடையே உடைந்து விழும் அபாய நிலையில் மின் கம்பங்கள் இருக்கிறது. இதனை அகற்றக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியபோது “நிலங்களில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின் கம்பங்கள் நடவேண்டும் என்று பலமுறை நாங்கள் மனு கொடுத்தோம். ஆனால் இதுவரை யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே மேலும் மின்வாரியம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

Categories

Tech |