Categories
உலக செய்திகள்

ஒரே ஒரு டுவிட் தான்…. மொத்தமும் குளோஸ்…. ரஷ்யாவை கலாய்த்து தள்ளிய உக்ரைன்….!!!!

தங்களது நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்து வருவதை அறிந்த உக்ரைன் நகைச்சுவை பதிவு ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

உக்ரைன் மீது படையெடுத்து அதை ஆக்கிரமிக்க ரஷ்யா திட்டம்போட்டு வருவதாக தகவல் வெளியான நிலையில் இது தொடர்பாக உக்ரைன் நகைச்சுவை பதிவு ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக நிலப்பரப்பில் ஐரோப்பாவின் 2-வது மிகப்பெரிய நாடாக உக்ரைன் இருக்கிறது. சோவியத் ஒன்றியம் துண்டானபோது பிரிந்த நாடுகளில் உக்ரைனும் ஒன்று ஆகும்.

உக்ரைனின் ஒரு பகுதியான கிரிமியாவை கடந்த 2014-ஆம் வருடம் பொதுவாக்கெடுப்பு மேற்கொண்டு ரஷ்யா தனது ஆதிக்கத்திற்குள் கொண்டு வந்தது. மேலும் முழு உக்ரைனையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ரஷ்யா முயற்சி செய்து வருகிறது. இதற்காக உக்ரைன் எல்லையிலும் படைகளை திரட்டி வருகிறது. இந்நிலையில் தாக்குதல் மேற்கொண்டு உக்ரைனை கைப்பற்ற ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அவ்வாறு செய்ய முயன்றால் பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. ரஷ்ய அதிபர் புடினுடன், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசியபோது உக்ரைன் உடனான மோதல் போக்கை கைவிட்டு பேச்சுவார்த்தை நடத்தும்படி தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி ரஷ்யா எந்த நேரமும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற சூழ்நிலை இருந்தபோது, இந்த அசாதாரண சூழல் குறித்து நகைச்சுவையான பதிவு ஒன்றை உக்ரைன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் வெளியிட்டுள்ளது. அதில் ரஷ்யாவுக்கு அருகில் வசிப்பது என்பது ஏனைய தலைவலிகளை விட கடுமையானது என்று புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |