Categories
உலக செய்திகள்

உக்ரைனை கைப்பற்ற திட்டம்…. அடுத்தவாரம் காணொளியில் பேச்சுவார்த்தை…. அமெரிக்க அதிபர் எச்சரிக்கை….!!

உக்ரைனை கைப்பற்றினால் ரஷ்யா கடுமையான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்று அமெரிக்க அதிபர் எச்சரித்து உள்ளார்.

உக்ரைன் எல்லைக்கு அருகில் சுமார் 94 ஆயிரம் படையினரை ரஷ்யா குவித்து இருப்பதாக கூறப்படும் நிலையில், அங்கு தொடர்ந்து போர் பதற்றம் நிலவுகிறது. 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சுமார் 1,75,000 படையினரை பயன்படுத்தி பெரும் தாக்குதல் மூலமாக உக்ரைனை கைப்பற்ற ரஷ்ய அதிபர் புடின் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தடுக்கும் வகையில் அவருடன் நீண்ட ஆலோசனை மேற்கொள்ளப் போவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து புடின் மற்றும் பைடன் இருவருக்கும் இடையே அடுத்தவாரம் காணொளி மூலம் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதனிடையில் ரஷ்யாவுக்கு எதிராக என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜோ பைடன் எதுவும் தெரிவிக்கவில்லை. எனினும் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா மற்றும் உக்ரைன் நடவடிக்கை எடுக்கும் என கூறப்படுகிறது.

Categories

Tech |