உலகக்கோப்பை கால்பந்து போட்டித் தொடர் வருகிற 20ஆம் தேதி கத்தார் நாட்டில் தொடங்க உள்ளது. 32 நாடுகள் பங்கேற்கவுள்ள இந்த கால்பந்து தொடர் 28 தினங்கள் ஆசியாவிலுள்ள ஒரு நாட்டில் நடைபெற இருப்பது இதுவே முதல் முறை ஆகும். இந்த உலகக்கோப்பை தொடரில் 32 அணிகள் கலந்துகொள்ளும் நிலையில், மொத்தம் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு கர்த்தாரில் உள்ள 8 மைதானங்களில் போட்டிகள் நடைபெறயிருக்கிறது.
இந்நிலையில் ஃபிபா உலகக்கோப்பை தொடரில் பாலின விகிதத்தை சமநிலைபடுத்தும் முயற்சியில் பெண் நடுவர்களை களமிறக்க ஃபிபா முயற்சிசெய்துள்ளது. அதன்படி 2022 உலகக்கோப்பையில் 6 பெண் நடுவர்கள் இடம்பெறுவார்கள் எனவும் அவர்களில் 3 பேர் உதவிநடுவர்களாக இருப்பார்கள் எனவும் ஃபிபா தெரிவித்துள்ளது. அத்துடன் இது ஒரு பெரிய சர்வதேச விளையாட்டில் முதல்முறையாகும் என்று ஃபிபா தெரிவித்து இருக்கிறது.
நடிகர் மோகன்லால் திரையுலகை தாண்டி தீவிரமான ஆர்வம் காட்டுவது எது எனில், அது கால்பந்து விளையாட்டுதான். இதற்கு முன்னதாக கேரள கால்பந்து அணி விளையாடும் போதெல்லாம் அதனை உற்சாகமாக புரமோட் செய்துவந்தார். இந்நிலையில் வருகிற நவம்பர் 20ஆம் தேதி கத்தாரில் பிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது தொடங்க உள்ளது. இதற்கென ஒரு இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கி வருகிறேன் என்று ஏற்கனவே மோகன்லால் கூறி இருந்தார். இப்போது அந்த வீடியோ பாடல் ஆல்பம் வெளியாகி இருக்கிறது.
இப்பாடலை மோகன்லால் பாடியுள்ளதோடு, அவரே இந்த முழு பாடலிலும் நடித்துள்ளார் என்பதுதான் இதில் ஹைலைட் ஆகும். இப்பாடலின் காட்சிகள் முழுக்க முழுக்க இளைஞர்களை, குறிப்பாக கால்பந்து வீரர்களை எப்படி பாசிட்டிவாக மோகன்லால் உற்சாகப்படுத்துகிறார் என்ற வகையில் படமாக்கப்பட்டு உள்ளது. இந்த பாடலை பிரபல இயக்குனர் டீகே ராஜீவ்குமார் இயக்கி இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றிபெற்ற ஹிருதயம் படத்தின் வாயிலாக இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர்.ரகுமானால் பாராட்டப்பட்ட ஹேசம் அப்துல் வகாப் இந்த பாடலுக்கு இசையமைத்துள்ளார்.