Categories
உலக செய்திகள்

உலகில் முதல் முறை பயன்படுத்தப்பட்டது…. வரும் டிசம்பர் 7-ம் தேதி முதல் ஏலம்…. வெளியான தகவல்….!!

உலகிலேயே முதல் முறையாக பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் அஞ்சல் தலை தற்போது ஏலத்திற்கு வர இருக்கிறது.

தபால்களில் அஞ்சல் தலை உபயோகிக்கும் வழக்கமானது 19 ஆம் நூற்றாண்டிலிருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் உலகில் முதல் முறையாக பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் அஞ்சல் தலை தற்போது ஏலத்திற்கு வருகிறது. இவற்றில் “பென்னி பிளாக்” என்று அழைக்கப்படும் அந்த அஞ்சல் தலையில் இங்கிலாந்து ராணி விக்டோரியாவின் படம் அச்சிடப்பட்டு இருக்கிறது. இந்த அஞ்சல் தலை 1840 ஆம் வருடம் ஏப்ரல் 10-ஆம் தேதி அனுப்பப்பட்ட கடிதத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

இது வருகின்ற டிசம்பர் 7-ஆம் தேதியன்று ஏலத்திற்கு விடப்படும் என்று தெரிகிறது. மேலும் அஞ்சல் தலையானது சுமார் 5.50 முதல் 8.25 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரையிலும் ஏலம் கேட்கப்படலாம் என்று எதிர்பார்ப்பதாக அதன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ்வாறு “பென்னி பிளாக்” எனப்படும் இங்கிலாந்து நாணயமான ஒரு பென்னிக்கு விற்கப்பட்ட 3 அஞ்சல் தலை தொகுப்பில் 2 ஏற்கனவே அருங்காட்சியகத்தில் இருக்கிறது.

இதனையடுத்து 3-வது அஞ்சல் தலையை ஸ்காட்லாந்தைச் சேர்ந்த அரசியல்வாதி மற்றும் அஞ்சல் தலை சேகரிப்பாளருமான ராபர்ட் வாலஸ் வைத்துள்ளார். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு அந்த அஞ்சல் தலையை ராபர்ட் வாலஸ் வாங்கினார். அதன்பின் பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு அது உலகின் முதல் அஞ்சல் தலைகளில் ஒன்று என்பதை ராபர்ட் வாலஸ் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |