Categories
உலக செய்திகள்

உலகிலேயே முதல் எஸ்.எம்.எஸ் எதுன்னு தெரியுமா?…. இதோ ஒரு சுவாரசியமான தகவல்…. படித்து தெரிஞ்சிக்கோங்க….!!!!

தொழில்நுட்ப வளர்ச்சி இன்று பல மடங்கு பெருகியுள்ளது. இதற்கு முன்பெல்லாம் தகவலை பரிமாற மெசேஜிங் என்ற வசதி இருந்தது. இதை எஸ்.எம்.எஸ் என்று சொல்வோம். அதிலும் குறிப்பாக இந்த குறுஞ்செய்தி வசதியை பயன்படுத்தி தான் நமது தகவல்களை பரிமாறி கொண்டு இருந்தோம். தற்போது உள்ள சாட் என்கிற வசதிக்கு மூலதலமே இந்த எஸ்.எம்.எஸ் (SMS) வசதி தான் ஆகும். கடந்த 10-15 வருடங்களுக்கு முன்பு வரையிலும் எஸ்.எம்.எஸ் தான் உலகை ஆண்டு கொண்டிருந்தது. இதனையடுத்து தொழில்நுட்ப ரீதியாக ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக இன்று நாம் பயன்படுத்த கூடிய வாட்ஸ்ஆப், பேஸ்புக் போன்ற பல்வசெறு மெசேஜிங் செயலிகள் வந்துவிட்டது.

உலகிலேயே முதன் முதலில் அனுப்பப்பட்ட எஸ்.எம்.எஸ் எதுவென்று பலருக்கும் தெரியாது. வோடோபோன் நிறுவனம்தான் முதன் முதலில் தன் வாடிக்கையாளர்களுக்கு இந்த எஸ்.எம்.எஸ் வசதியை அறிமுகம் செய்தது. அதாவது நெயில் பப்புவோர்த் என்பவர் தனது கணினி வழியாக ரிச்சர்ட் ஜார்விஸ் என்பவருக்கு ‘மேர்ரி கிறிஸ்துமஸ்’ (‘Merry Christmas’) என்கிற எஸ்.எம்.எஸ்-யை முதன்முதலில் அனுப்பினார். வோடோபோன் நிறுவனத்தின் அப்போதைய தலைமை அதிகாரிதான் இந்த ரிச்சர்ட் ஜார்விஸ் என்பவர் ஆவார். ஆர்பிட்டல் 901 மொபைலுக்கு இந்த எஸ்.எம்.எஸ்-யை அனுப்பியு உள்ளார்.
இது சுமார் 14 கேரக்டர்களை கொண்டது. இந்த எஸ்.எம்.எஸ் 1992 ஆம் வருடம் முதன் முதலில் அனுப்பப்பட்டது. உலகில் முதன் முதலிலாக அனுப்பப்பட்ட இந்த எஸ்.எம்.எஸ் தற்போது ஏலம் விடப்பட்டு உள்ளது என்று லண்டனை சேர்ந்த வோடோபோன் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகார பூர்வ அறிவிப்பது தந்துள்ளது. இந்த எஸ்.எம்.எஸ்-யை பல பேர் ஏலத்தில் வாங்க தயாராக இருக்கின்றனர். இது சுமார் 170,000 யூரோக்களுக்கு ஏலம் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்த்து உள்ளனர். சுமார் 29 வருடங்களுக்கு பின் உலகின் முதல் எஸ்.எம்.எஸ் ஏலம் விடப்படுவதால் பலர் ஆவலாக உள்ளனர்.
இந்த ஏலத்தில் கிடைக்கும் பணத்தை அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையத்திடம் (United Nations High Commissioner for Refugees) வழங்க உள்ளதாக வோடோபோன் நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதன் மூலமாக பல்வேறு தாக்குதல்கள் மற்றும் துன்புறுத்தல் காரணமாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிய 82.4 மில்லியன் அகதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்த பணத்தை ஐநா செலவு செய்ய உள்ளது. மக்களுடன் தொடர்பு கொள்ள முதன்முதலில் உருவாக்கப்பட்ட இந்த எஸ்.எம்.எஸ் தொழில்நுட்பம் தான் மாபெரும் வளர்ச்சி பெற்று பல புதிய தொழில்நுட்பங்களை தொடங்க வழிவகுத்து உள்ளது. இந்த எஸ்.எம்.எஸ் வசதி முன்பு இருந்ததை போன்று இல்லாமல் நமக்கு தேவையானதை நொடி பொழுதில் செய்வதற்கு மிக முக்கியமான அங்கமாகும்.

Categories

Tech |