ஒமிக்ரான் பரவலை உள்ளூர் மட்டத்திலேயே தடுக்க, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலர் கடிதம் எழுதியு உள்ளார். அதில் கடிதத்தில் “பொது இடங்களில் மக்கள் கூடும் கூட்டங்களுக்கு மாநில அரசு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.
மேலும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நபர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். கொரோனா பரவல் அதிகம் கண்டறியப்படும் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். இதன் மூலமாக கொரோனா பரவலை தொடக்க நிலையிலேயே தடுக்க முடியும்” எனக் கூறப்பட்டுள்ளது.