Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உங்களுக்கு இந்த பாதிப்பு இருக்கா…? அப்ப நீங்க மஞ்சளை பயன்படுத்தாதீர்கள்… ஆபத்து இருக்கு..!!

மஞ்சள் கை வைத்தியத்தில் மிக முக்கியமாக பயன்படும் பொருள் என்று சொல்லலாம். மஞ்சளில் இருக்கும் குர்குமின் என்னும் பொருள் அதிக முக்கிய நன்மைகளை தருகின்றது.

நம் சமையல் சமையலில் மசாலா பொருளாக சேர்க்கப்படும் மஞ்சள் பலவகையாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. உணவுக்கு நிறமும், சுவையும் கொடுக்கக் கூடிய மஞ்சள் எல்லோருடைய சமையலறையில் முதன்மை இடம் பிடிக்கும். மஞ்சள் அதிகமாக பயன்படுத்தும் போது உண்டாகும் பக்க விளைவுகள் குறித்து இதில் பார்ப்போம். மஞ்சளின் பயன்பாடு மஞ்சள் இயற்கையாகவே பாக்டீரியாவை எதிர்க்கும் முக்கிய பொருளாக விளங்குகிறது.

சளி, இருமல், காய்ச்சல், நோய் தொற்று காலங்களில் மஞ்சள் பால் நிவாரணம் அளிக்கின்றது. நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய ஒரு பொருள் மஞ்சள். கைவைத்தியம் முதல் அல்சைமர் வரை பல நோய்களுக்கு மஞ்சள் நன்மை தரக் கூடியது என்றாலும் அமிர்தமாக இருந்தாலும் அளவாக சாப்பிட வேண்டும் என்பதுதான் உண்மை.

வயிற்றுக்கோளாறு

வயிற்றுக்கோளாறு அதிகப்படியான மஞ்சள் வயிற்றில் செரிமானத்தை பாதிக்கும். புற்றுநோய் தாக்கம் இருப்பவர்கள் மஞ்சளை எடுத்துக் கொள்ளும் போது இதை தவிர்ப்பதாக கூறினார்கள். ஏனெனில் அது செரிமானம் அதிகமாக பாதிக்கப்பட்டு இருப்பது தான். மஞ்சள் இரைப்பையில் அமில சுரப்பை அதிகரிக்க செய்யும். இதனால் வயிற்றுப் பிடிப்பு வழிவகுக்கிறது.

ரத்தத்தை மெலிதாக செய்கிறது

மஞ்சள் ரத்தத்தை மெலிதாக்க செய்கிறது. மஞ்சள் உடல் சுத்திகரிப்பின் போது ரத்தம் மெலிதல் உண்டாகிறது. கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தம் குறைப்பில் மஞ்சள் பயன்படுகிறது என்றாலும் ரத்தத்தில் மஞ்சள் செயல்படும் விதத்தில் இத்தகைய நிலைகள் உண்டாகலாம். குறிப்பாக ரத்த மெலிப்பு மருந்துகள் எடுத்துகொள்பவர்கள் மஞ்சளை அதிகம் எடுக்கும் போது இந்நிகழ்வு அதிகமாக பாதிக்கப்படுகிறது.

சிறுநீரக கற்களை உருவாக்கும்

மஞ்சள் அதிகமாக எடுக்கும்போது சிறுநீரக கற்களை உருவாக்குவது. மஞ்சளில் இருக்கும் ஆக்சலேட்டுகள் கால்சியத்துடன் இணைந்து கால்சியம் ஆக்சலேட் உருவாக்குகிறது. இது கரையாத தன்மை கொண்டிருக்கும் சிறுநீரக கற்களை உருவாக்குகிறது. மஞ்சளில் 2% ஆக்சலேட் உள்ளதால் இதனை சிறுநீரக கல் பாதிப்பு இருப்பவர்கள் பயன்படுத்தக்கூடாது.

இரும்புச்சத்து

மஞ்சள் இரும்புச்சத்தை உறிஞ்சுவதை தடுத்து இரும்பு சத்து குறைபாட்டை உண்டாக்கும். தேவையான அளவு எடுத்துக் கொள்ளும் போது இத்தகைய பிரச்சனை உண்டாவதில்லை. அதே தேவைக்கு அதிகமாக இருக்கும் போது மஞ்சள் இரும்புச்சத்து குறைபாடு பிரச்சனையை ஏற்படுத்துகிறது. மஞ்சளை அதிகம் சேர்க்கும் போது அது சத்து குறைபாடு அதிகரிக்க செய்யவும் வாய்ப்பு உண்டு.

சரும பாதிப்பு

சரும பாதிப்புக்கான சிகிச்சையில் கதிர்வீச்சு செய்யும் போது மஞ்சளில் இருக்கும் குர்குமின் சரும பிரச்சனைகளை தடுப்பதாக தெரியவில்லை. அது போன்ற அறுவை சிகிச்சை செய்து கொள்பவர்கள் சிகிச்சைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்தே மஞ்சளை குறைத்துக்கொள்ளவேண்டும். மஞ்சளின் பயன்பாடு ரத்தம் உறைதலை தாமதப்படுத்துகிறது.

நாளொன்றுக்கு மஞ்சள் எவ்வளவு தேவை என்பதற்கான சரியான பரிந்துரைகள் இல்லை. அது போன்ற அதிகபட்ச அளவிற்கான பரிந்துரையும் சொல்லப்படவில்லை. பொதுவாக சில வழிகாட்டுதல்கள் நாளொன்றுக்கு ஒரு டீஸ்பூன் அளவு மஞ்சள் பயன்படுத்த, அதுவும் ரசாயணம் கலக்காத தூய்மையாக இருக்க வேண்டும். உடலில் எதிர்வினையை உண்டாக்கும் மஞ்சள் ஆரோக்கியமானது என்று அதிகமாக சேர்ப்பது தவிர்க்க வேண்டும்.

Categories

Tech |