Categories
தேசிய செய்திகள்

“உணவில் போதை மருந்து”… மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம்…. போலீஸ் நடவடிக்கை… பெரும் அதிர்ச்சி….!!!

உத்தரபிரதேசத்தில் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பள்ளி முதல்வரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேற்கு உத்தரபிரதேசத்தின் முசாபர்நகர் புர்காஜி பகுதியில் சூர்யதேவ் பப்ளிக் பள்ளிக்கூடம் இருக்கிறது. இந்த பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பில் மட்டும் 29 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கான பயிற்சி தேர்வு அருகில் உள்ள ஜிஜிஎஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் கடந்த மாதம் 19-ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் இதற்கு முதல்நாள் வகுப்புக்கு வந்தவர்களில் 17 மாணவிகளை மட்டும் சூர்யதேவ் பள்ளி வகுப்பில் நள்ளிரவு வரை பயில வேண்டும் என்று கூறி அங்கு தங்க வைத்துள்ளனர்.

இதனையடுத்து இரவு வேளையில் உணவில் போதை மருந்து கலந்து கொடுத்து மாணவிகளுக்கு பாலியல் கொடுமை நடந்ததாக புகார் பெறப்பட்டது. இந்த நிலையில் ஜிஜிஎஸ் பள்ளி முதல்வர் யோகேஷ் குமார்சவுகான், சூர்யதேவ் பள்ளி முதல்வர் அர்ஜுன்சிங் ஆகியோர் மீது மாணவிகளின் பெற்றோர் புகார் கொடுத்தனர். ஆனால் சம்பந்தப்பட்ட போபா காவல்துறையினர் அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதன்பின் தொகுதி பாஜக எம்எல்ஏ பிரமோத் உத்வலிடம் பெற்றோர் புகார் கொடுத்தனர். அவரது தலையீட்டின் பேரில் மாவட்ட எஸ்எஸ்பி அபிஷேக் யாதவ் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த ஜிஜிஎஸ் பள்ளி முதல்வர் யோகேஷ் குமார் மீது காவல்துறையினர் போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Categories

Tech |