Categories
தேசிய செய்திகள்

உங்க போன் தொலைஞ்சுட்டா?…. இந்த இரண்டையும் உடனே பிளாக் பண்ணுங்க?…. இல்லன்னா உங்களுக்குத்தான் ஆபத்து…..!!!!

இந்தியாவில் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவோர்  Google Pay, PayTM, PhonePe ஆகிய செயலிகளை பணப் பரிவர்த்தனைகளுக்காக பயன்படுத்த துவங்கிவிட்டனர். யுபிஐ ஐடி வாயிலாக பணப்ப ரிவர்த்தனை செய்வது வாடிக்கையாளர்களுக்கு எளிமையாக உள்ளது. NPCI (National Payments Corporation of India) தரவுகளின் அடிப்படையில் செப்டம்பர் மாதத்தில் UPI பரிவர்த்தனைகள் மட்டும் ரூ.11 லட்சம் கோடியைத் தாண்டி இருக்கிறது. இவ்வளவு லட்சம் கோடிகள் அனைத்தையும் கையிலுள்ள ஒரு மொபைபோனை வைத்தே மக்கள் பரிவர்த்தனை செய்து இருக்கின்றனர். எனினும் இவற்றில் கவனமாக இருக்கவேண்டிய அம்சங்களும் இருக்கிறது.

ஆன்லைன் ஹேக்கர்களிமிருந்து எவ்வாறு தப்பிப்பது?, போன் தொலைந்து போனால் யு.பி.ஐ ஐடிகளை எப்படி பிளாக்செய்வது? ஆகிய விஷயங்களை நாம் கட்டாயம் தெரிந்து வைத்திருக்கவேண்டும்.  நீங்கள் மொபைலை தொலைத்து விட்டால், கட்டாயம் யுபிஐ ஐடியை பிளாக்செய்ய வேண்டும் (அல்லது) உங்களது மொபைலில் இருந்து வங்கி தொடர்பை செயல் இழக்க செய்யவேண்டும். இந்த இரண்டுக்கும் ஏதேனும் வழி உள்ளதா என்பதை இங்கு பார்ப்போம். உங்களது கூகுள்பே (அ) பேடிஎம் கணக்கை தடுப்பதற்கு 18004190157, 01204456456 ஆகிய எண்ணில் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொள்ளவும். அதே போல் போன் பே-க்கு, 08068727374 (அ) 02268727374 எனும் எண்னுக்கு அழைத்து வழிமுறைகளை கடைபிடிக்கவும்.

# முதலில் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகவேண்டும்.

# தொலைந்த போனின் விருப்பத்தினைத் தேர்வு செய்யவேண்டும்.

# வேறு ஃபோன் எண்ணை உள்ளிடுவதற்குரிய விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் தடுக்கவிரும்பும் கணக்குடன் இணைக்கப்பட்ட எண்ணை உள்ளிட வேண்டும்.

# அனைத்து சாதனங்களில் இருந்தும் வெளியேறும் விருப்பத்தினைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

# Paytm பயனாளர்கள் அதிகாரப்பூர்வமான இணையதளத்திற்குச் சென்று மோசடியைப் புகாரளிப்பதன் வாயிலாக தங்களது கணக்குகளைத் தற்காலிகமாகத் தடுக்கலாம். அவர்கள் டெபிட் (அல்லது) கிரெடிட்கார்டு அறிக்கை (அல்லது) sms வாயிலாக கணக்கின் உரிமைச்சான்றுகளை வழங்க வேண்டும். சரிபார்த்த பின் கணக்கு தற்காலிகமாக தடுக்கப்படும்.

மொபைலிலுள்ள டேட்டாவை எப்படி அழிப்பது?

Android பயனாளர்கள் “android.com/find” வாயிலாக தரவைக் கண்டறியலாம், லாக் செய்யலாம் (அல்லது) அழிக்கலாம். உங்களது ஜிமெயில் கணக்கில் உள்நுழைய வேண்டும். உங்களது மெயில் ஐடியுடன் பல்வேறு சாதனங்கள் இணைக்கப்பட்டு இருந்தால், நீங்கள் இழந்த ஸ்மார்ட் போனைத் தேர்ந்தெடுத்து, தரவை அழிக்கவும். Apple (iOS) பயனாளர்கள் ஃபோன் டேட்டாவை அழிக்க Find My App ஐப் பயன்படுத்தலாம்.

Categories

Tech |