Categories
உலக செய்திகள்

“உங்களுக்கு உதவ நாங்க இருக்கோம்” 50 லட்சம் டோஸ் தடுப்பூசி அனுப்பி வைத்த பிரபல நாடு….!!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்கா கூடுதலாக 50 லட்சம் தடுப்பூசி டோஸ்களை பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தது.

அமெரிக்க அரசு பாகிஸ்தானிய மக்களுக்கு கூடுதலாக 50 லட்சம் தடுப்பூசி டோஸ்களை அனுப்பி வைத்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க தூதரகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “அமெரிக்க அரசால் கோவேக்சின் முயற்சியின் ஒரு பகுதியாக கூடுதலாக 50 லட்சம் பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலமாக அமெரிக்க அரசால் பாகிஸ்தானிய மக்களுக்கு வழங்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 3 கோடியே 70 லட்சத்தை தாண்டி இருக்கிறது. மேலும் கொரோனா கால நிதியாக 6 கோடியே 94 லட்சம் டாலர்களை அமெரிக்கா, பாகிஸ்தானுக்கு அளித்து உதவியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் உலகம் முழுவதிலும் 30 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்களை அமெரிக்கா வழங்கியுள்ளது” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையில் தடுப்பூசி போட்டு கொள்வதே மிகச்சி றந்த பரிசாக அமையும் என்று அமெரிக்க தூதரகத்தின் இஸ்லாமாபாத் பொறுப்பாளர் ஏஞ்சலா பி அகெலெர் தெரிவித்துள்ளார்

Categories

Tech |