Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“உன்னை அசிங்கப்படுத்தி விடுவேன்” கள்ளக்காதலிக்கு நடந்த கொடூரம்…. என்ஜினீயரின் பரபரப்பு வாக்குமூலம்….!!

கள்ளக்காதலி திருமணத்துக்கு வற்புறுத்தியதால் என்ஜினீயர் அவரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் அடரி களத்தூர் தெற்கு தெருவில் கருப்பையா என்பவரின் மனைவி எழிலரசி வசித்து வந்தார். இவர் கடந்த 17-ஆம் தேதியன்று சேலம் மாவட்டத்திலுள்ள ஆத்தூர் புதுப்பேட்டை பகுதியில் ஒரு தங்கும் விடுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் எழிலரசி வீட்டுக்கு அருகில் வசிக்கும் என்ஜினீயர் இளங்கோ என்பவர் அவரை கொலை செய்து விட்டு தப்பி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இந்நிலையில் தனிப்படை காவல்துறையினர் இளங்கோவை கைது செய்து ஆத்தூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு காவல்துறையினர் இளங்கோவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் இளங்கோ காவல்துறையினரிடம் கூறிய பரபரப்பு வாக்குமூலத்தில் “எங்கள் வீட்டின் பக்கத்து வீட்டில் எழிலரசி வசித்து வந்தார். இவருடைய கணவர் கருப்பையா வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு 3 பிள்ளைகள் இருக்கின்றனர். இதற்கிடையில் நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது எழிலரசி எனக்கு அறிமுகமானார். அப்போது எழிலரசிக்கு நான் சில உதவிகள் செய்து வந்தேன். இதனால் நான் அடிக்கடி எழிலரசியின் வீட்டுக்கு சென்றுவிட்டு வருவேன். இதனிடையில் எழிலரசியின் கணவர் வெளிநாட்டில் இருந்ததால் எங்களுக்குள் நெருக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அதன்பின் எழிலரசியும், நானும் ரகசியமாக சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தோம்.

அப்போது எழிலரசி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி என்னிடம் கேட்டார். அதற்கு நான் நமது இருவருக்கும் 20 வயது வித்தியாசம் இருப்பதால் திருமணம் செய்து கொண்டால் சரிப்பட்டு வராது என்று எழிலரசியிடம் கூறினேன். எனினும் எழிலரசி திருமணத்துக்கு வற்புறுத்தியதால் நான் அவரை விட்டு விலக முடிவு செய்தேன். இதனால் எனக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்ததால் நான் அங்கு போகிறேன் என்று எழிலரசியிடம் தெரிவித்தேன். இருப்பினும் எழிலரசி நான் என்னுடைய கணவரை விட்டு உன்னுடன் வந்து விடுகிறேன் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று தொடர்ந்து என்னை கட்டாயப்படுத்தி வந்தார். இதன் காரணமாக நான் என் நிம்மதியை இழந்து தவித்து வந்தேன். ஆகவே எழிலரசி உயிரோடு இருந்தால் நான் நிம்மதியாக வாழ முடியாது என நினைத்து அவரை சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதிக்கு அழைத்து வந்தேன்.

இதனைதொடர்ந்து அங்குள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து நாங்கள் இருவரும் தங்கினோம். அப்போதும் தன்னை திருமணம் செய்துகொள் என எழிலரசி என்னிடம் கேட்டார். ஆனால் நான் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டேன். அதற்கு எழிலரசி தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் நமது கள்ளக்காதலை ஊர் முழுவதும் சொல்லி உன்னை அசிங்கப்படுத்தி விடுவேன் என்று கூறினார். இதன் காரணமாக கோபமடைந்த நான் எழிலரசி சேலையால் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தேன். அதன்பின் அந்த சேலையில் எழிலரசி தூக்கிட்டு இறந்தது போல் வைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டேன்” என்று அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இவ்வாறு கள்ளக்காதலி திருமணத்துக்கு வற்புறுத்தியதால் என்ஜினீயர் அவரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |