Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“உன்னை எரித்து கொன்றுவேன்” 23 நபர்களிடம் மோசடி…. கைது செய்த போலீஸ்….!!

வீட்டுமனை விற்பனை செய்வதாக கூறி 23 நபர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள சூளை ஈ.பி.பி நகரில் தேவராஜன்-லதா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் லதா மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் இருப்பதாவது நரிபள்ளம் பகுதியில் உள்ள ஒரு கம்பெனியில் நான் பணி செய்து வருகிறேன். கடந்த 2017-ஆம் ஆண்டு சொந்தமாக வீடு கட்டுவதற்காக இடம் தேடிக்கொண்டு இருக்கும்போது ஸ்டார் ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பாக நசியனூர்ரோடு ஏற்க்கங்காட்டுவலசு நகரில் வீட்டுமனைகள் பிரிக்கப்பட்டு விற்பனைக்கு இருப்பது எனக்கு தெரியவந்தது. இதனால் அந்த நிறுவனத்தை கேட்டபோது உரிமையாளர் ஸ்டார் பாபு என்கிற பாபுதஸ்தகீர் தன்னிடம் பேசினார்.

அப்போது ஏற்க்கங்காட்டுவலசு ஸ்டார் நகரில் 2 ஆயிரத்து 200 சதுர அடி கொண்ட வீட்டுமனையை வாங்குவதற்கு மொத்தம் 19 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு பேசி முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து 2 தவணையாக 6 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் நான் ஸ்டார் பாபுவிடம் கொடுத்தேன். ஆனால் ஸ்டார் பாபு அதற்கு ரசீது மட்டும் கொடுத்துவிட்டு பத்திரத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் சந்தேகமடைந்த நான் இடத்தைக் குறித்து விசாரித்தபோது அது ஸ்டார் பாபுவுக்கு சொந்தமான இடம் இல்லை என்பது தெரியவந்தது. இதன் காரணமாக ஸ்டார் பாபுவிடம் நான் பணத்தை திருப்பிக் கேட்டபோது அவர் கொடுக்க மறுத்து விட்டார்.

மேலும் நான் காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததால் என்னை உயிரோடு எரித்துக் கொன்று விடுவதாக ஸ்டார் பாபு கொலை மிரட்டல் விடுத்தார். ஆகவே எனது பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்று லதா மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு அனுப்பிவைத்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் ஸ்டார் பாபு மொத்தம் 23 நபரிடம் சுமார் 63 லட்சம் ரூபாய் மோசடி செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனைதொடர்ந்து பெரியார் நகரில் அவரது அலுவலகத்தில் இருந்த ஸ்டார் பாபுவை காவல்துறையினர் கைது செய்தனர்.

Categories

Tech |