Categories
இந்திய சினிமா சினிமா

விரைவில் தென்னிந்திய சினிமாவில் கால் பதிக்கும் பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள்…. வெளிவரும் தகவல்கள்….!!!!

கடந்த சில ஆண்டுகளாகவே தென் இந்திய சினிமாவில் நடிப்பேன் என்று ஜான்பி கபூர் கூறி வருகிறார். இவர் மறைந்த பிரபல தமிழ் மற்றும் ஹிந்தி நடிகையான ஸ்ரீ தேவியின் மகள் ஆவார்.  லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை ஜான்பி கபூர் ஹிந்தியில் ரீமேக் செய்து நடித்தார். இவர் சென்னையில் நடந்த நிக்ழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது ஜான்பி கபூரிடம் அடுத்த படங்கள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், பவால் விரைவில் ரிலீஸாக இருக்கிறது. அதன்பின் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸர்ஷ். மேலும் விரைவில் தென் இந்திய படங்களில் நடிப்பேன்” என அவர் கூறியுள்ளார். மேலும் ஜான்பி கபூர் விஜய் தேவரகொண்டா, ராம்சரண் திரைப்படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும் தற்போதைய தகவலின் படி ஜூனியர் என்.டி.ஆர் அவருக்கு தன் முதல் தென்னிந்திய திரைப்படமாக இருக்கலாம் என தெரிகிறது.

Categories

Tech |