பெண்ணை தாக்கி மர்ம நபர் நகை பறித்து சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெரிய தப்பை பகுதியில் சின்னபையன்-சின்னத்தாய் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் சின்னதாய் அதிகாலை வீட்டின் முன்பு உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் சின்னத்தாயின் முகத்தை தலையணையால் அமுக்கி, தாக்கியதோடு அவர் காதில் அணிந்திருந்த நகையை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.