Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உறங்கிக் கொண்டிருந்த பெண்…. மர்ம நபரின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

வீடு புகுந்து மர்ம நபர் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி ரயில்வே ஸ்டேஷன் நாடார் காலனி பகுதியில் சாந்தமூர்த்தி-ஜெயலட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களில் ஜெயலட்சுமி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது தனது கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை யாரோ மர்ம நபர் பறித்துச் செல்வது போன்று ஜெயலட்சுமி உணர்ந்தார்.

இதனையடுத்து ஜெயலட்சுமி கண் விழித்து பார்க்கும்போது தான் அணிந்து இருந்த தங்க சங்கிலியை யாரோ மர்ம நபர் பறித்து சென்றது தெரியவந்தது. மேலும் வீட்டில் இருந்த நெக்லஸ், மோதிரம் உள்ளிட்ட நகைகளையும் மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார். இவ்வாறு மொத்தம் 5 1/4 பவுன் நகைகள் திருட்டு போனது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |