இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகளின் நட்பு தொடர்ந்து வலிமையடைந்து வருகிறது என்று டெல்லியில் நடைபெற்ற 21 ஆவது உச்சி மாநாடு கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்தியா, ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கிடையேயான 21 ஆவது உச்சி மாநாடு கூட்டம் தலைநகர் டெல்லியில் வைத்து நடைபெற்றுள்ளது. இதில் பங்கேற்ற இரு நாட்டு தலைவர்களும் கலந்துரையாடியுள்ளார்கள்.
அப்போது இந்தியா, ரஷ்யா நாடுகளுக்கிடையேயான நட்புறவு தொடர்ந்து வலிமையடைந்து கொண்டே செல்கிறது என்று தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 21- ஆவது உச்சிமாநாடு கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி அதிபர் விளாடிமிர் புதினிடம் தெரிவித்துள்ளார்.
அதோடு மட்டுமின்றி உலகம் பல மாற்றங்களை கண்டாலும் இந்தியா, ரஷ்யா நாடுகளுக்கிடையேயான உறவு எந்தவித சிக்கலுமின்றி தொடர்ந்து நிலையாகவுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.