Categories
தேசிய செய்திகள்

“திரும்பி வாடா” இறந்த யானையை பார்த்து…. கதறி அழுத அதிகாரி…. வைரல் வீடியோ…!!

வனத்துறை அதிகாரி ஒருவர் உயிரிழந்த யானையை பிடித்து  கதறி அழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

முதுமலை புலிகள் காப்பகத்தில் காயமடைந்த யானைகளுக்கு முகாம் நடத்தப்பட்டு சிகிச்சை அளிப்பது வழக்கம். அப்படி மசினகுடியில் காயமடைந்த ஒரு யானைக்கு முகாமில் வனத்துறையினர் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். அப்போது ஒரு அதிகாரி மட்டும் அந்த யானையை அக்கறையோடு கவனித்து வந்துள்ளார். யானைக்கு தீவிர சிகிச்சை அளித்தும் இறந்துபோனது . இதையடுத்து இறந்த யானையை பணியாளர்கள் லாரியில் ஏற்றி உள்ளனர்.

அப்போது லாரியின் மீது ஏறி அந்த வனப் பாதுகாவலர் யானையின் தந்தத்தை பிடித்துக் கொண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார். இந்த சோகமான காட்சியை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட இந்திய வனப் பணி அதிகாரிகள் சங்கம், “சில உணர்வுபூர்வமான தருணங்களை வார்த்தைகளால் விவரிக்க இயலாது, அவரை பொறுத்தவரை யானை சாகவில்லை அவரது இதயத்தில் தான் இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

Categories

Tech |