கொரோனா பரிசோதனை செய்து ஒரு வார காலம் ஆகியும் இன்னும் பரிசோதனை முடிவுகள் வரவில்லை என பிரபல நடிகை புகார் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின்பரவல் மிகவும் தீவிரம் அடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதில் திரை பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல நடிகை பியாவின் சகோதரர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனாவால் உயிரிழந்தார்.மேலும் அவருக்கு மருத்துவ உதவி கிடைக்காததால் தான் உயிரிழந்ததாக நடிகை பியா தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து நடிகை பியாவின் குடும்பத்தினர் அனைவருக்கும் கடந்த மே 7-ஆம் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் ஒரு வாரங்களுக்கு மேலாகியும் இதுவரை இவர்களது பரிசோதனைகள் முடிவுகள் வரவில்லை. ஆகையால் நடிகை பியா இதுகுறித்து புகார் தெரிவித்துள்ளார்.