சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதிலளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்ட மன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணி 13 தொகுதிகல் வெற்றி பெற்றது. அதிமுக 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்களின் பதவி ஏற்பு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்றது. சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க வேட்பாளர்கள் 13 பேரும் எம்.எல்.ஏக்களாக பதவியேற்றனர்.
இதனால் தமிழக சட்ட மன்றத்தில் 88 ஆக இருந்த திமுக எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது. பதவியேற்புக்கு பிறகு திமுக தலைவர் முக ஸ்டாலினிடம் பத்திரிகையாளர்கள், சட்ட சபையில் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டதில் திமுக உறுதியாக உள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பினர். இதற்கு முக ஸ்டாலின் Wait And See என்று பதில் அளித்தார். ஸ்டாலினின் இந்த பதில் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.