Categories
அரசியல் மாநில செய்திகள்

தன் கணவர் வரும்வரை…. காத்திருந்து பதவி ஏற்ற…. தமிழிசையின் நெகிழ்ச்சி செயல்…!!

தன்னுடைய கணவர் வரும்வரை காத்திருந்து தமிழிசை பதவியேற்றுக்கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பாஜக தலைவராக தலைவராக இருந்தவர் தமிழிசை சௌந்தரராஜன். தெலுங்கானா ஆளுநராக இருந்த இவர் தற்போது புதுச்சேரி துணை ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பதவி பிரமாணம் நேற்று நடைபெற்றது. அப்போது குடியரசுத் தலைவரிடமிருந்து அளிக்கப்பட்ட வாரண்ட் என்று கூறும் ஒரு கடிதத்தை தமிழிசை சௌந்தரராஜன் கையில் கொண்டு வரவில்லை. அப்போது தலைமை நீதிபதி படிக்க தயாரானபோது அந்த கடிதத்தை தேடியுள்ளார். அப்போது அது தன்னிடம் இல்லை என்பதால், மேசையின் மேல் இருப்பதை உணர்ந்து தன்னுடைய கணவரான டாக்டர் சௌந்தரராஜனிடம்  தெரிவித்துள்ளார்.

உடனே டாக்டர் சௌந்தரராஜன் உள்ளே சென்று அந்த பேப்பரை எடுத்துக் கொடுக்க சென்றுள்ளார். அப்போது அங்கிருந்தவர் ஒருவர் தன்னிடம் ஒரு நகல் இருப்பதாக கூறியுள்ளார். இதனால் அவரை கூப்பிடுங்க என்று இரண்டு முறை தமிழிசை கூறியுள்ளார். அதற்குள் டாக்டர் சௌந்தரராஜன் வந்து வாரண்டு காப்பியை கொடுத்தார். கணவருக்காக காத்திருந்து அவர் வந்த பிறகுதான் தமிழிசை  துணை ஆளுநராக பதவி ஏற்றுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |