சியான் 60 திரைப்படம் ஜிகர்தண்டாவின் part 2 ஆகா இருக்கலாம் என்ற தகவல்கள் பரவி வருகின்றன.
தற்போது ட்விட்டரில் சியான் 60 படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கோலிவுட் வட்டாரங்களில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த படத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் ஆகியோர் இணைந்து நடித்து ள்ளனர். இந்த படத்தை விக்ரமின் கோப்ரா மற்றும் விஜய்யின் மாஸ்டர் ஆகிய திரைப்படங்களை இயக்கிய நிறுவனமான செவன் ஸ்க்ரீன் தயாரிக்க உள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த படம் ஒரு கேங்ஸ்டர் படம் என்பதை துப்பாக்கியுடன் இருக்கக்கூடிய அந்த போஸ்டரே நமக்கு காட்டுகிறது. மேலும் சில சுவாரசியமான தகவல்களும் இந்த படம் குறித்து கசிந்துள்ளன. அது என்னவென்றால் பாபி சிம்மா சித்தார்த் லட்சுமி மேனன் உள்ளிட்டோர் இணைந்து நடித்து வெற்றிகரமாக ஓடிய படம் ஜிகர்தண்டா. இதில்,
அசால்ட் சேது என்ற கதாபாத்திரத்தில் மிரட்டிய பாபி சிம்ஹாவின் கேரக்டர் தான் தற்போது விக்ரம் எடுத்து நடிக்கப் போவதாகவும் ஜிகர்தண்டா படத்தின் part 2வாக கூட இருக்கலாம் என்றும் ரசிகர்கள் மத்தியில் தகவல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இது உண்மையா? பொய்யா? என்பதை இயக்குனர் தான் கூறவேண்டும். இயக்குனரை பற்றி கூற வேண்டுமென்றால் அவர் கேங்ஸ்டர் ரீதியான படங்களை எடுப்பதில் வல்லவர். எனவே இந்த படம் சிறப்பாக அமையும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.